விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாறைப்பட்டி பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், தேனியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் காளீஸ்வரன், ஜெயந்த் ஆகிய இருவரும் வந்து கொண்டிருந்தனர்.
அதே நேரத்தில் நத்தம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் கார்த்திக் பாண்டி என்பவரும் இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டு இருந்தபோது, அழகாபுரி அருகே பாறைபட்டி விளக்கு பகுதியில் இருவருடைய இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
நேருக்கு நேர் மோதிக்கொண்ட இருசக்கர வாகனங்கள் இந்த விபத்தில் காவலர் கார்த்திக் பாண்டி, கல்லூரி மாணவர்கள் காளீஸ்வரன், ஜெயந்த் ஆகிய மூவரும் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூவரின் உடலையும் காவல் துறையினர் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அனுப்பிவைத்தனர். விபத்து தொடர்பாக நத்தம்பட்டி, கல்லுப்பட்டி ஆகிய இரண்டு காவல் நிலைய காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:சூடான் தீ விபத்து - உயிருடன் வெளிநாடு சென்ற மகன் பிணமாய் வந்த சோகம்