விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அச்சம்தவிர்த்தான் பகுதியில் வட்டாட்சியர் கிருஷ்ணவேணி தலைமையில் வருவாய்த் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள தடுப்பு அணைகளில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளிக் கொண்டிருந்த ஜேசிபி இயந்திரம், டிப்பர் லாரி, டிராக்டர் ஆகிய மூன்று வாகனங்களை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.