தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கண்மாயில் 10க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்த 2 நபர்கள் கைது! - Two persons arrested for possessing bombs

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்த வழக்கில், இரண்டு நபர்களை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்த வழக்கில் இரண்டு நபர் கைது

By

Published : Nov 15, 2019, 9:55 PM IST

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டி காவல்நிலையம் பின்புறம் விளாங்குளம் கண்மாயில் கடந்த மாதம் 13ஆம் தேதி 10க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகளைக் காவல் துறையினர் கைப்பற்றினர்.

பின்னர், மதுரை வெடிகுண்டு தடுப்பு காவல்துறை உதவியுடன், நீதிமன்ற உத்தரவுப்படி மம்சாபுரம் காவல் துறையினர் வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்தனர். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்து வெடிகுண்டுகள் வைத்த குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வந்தனர்.

நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்த வழக்கில் இரண்டு நபர்கள் கைது

இந்நிலையில், மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார், ஜெயக்குமார் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கார் மோதி தூக்கி எறியப்பட்ட மூதாட்டி - பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details