தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரேநாளில் இருவர் விஷம் குடித்து தற்கொலை! - latest suicide news

விருதுநகர்: ஒரே நாளில் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் இளைஞர் மற்றும் முதியவர் என இருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தூரப்பன்
சாத்தூரப்பன்

By

Published : Oct 2, 2020, 9:59 AM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள நடராஜா தியேட்டர் பின்புறம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் பாபு என்ற சாத்தூரப்பன் (32). லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வரும் கந்தசாமியுடன் இணைந்து சாத்தூரப்பன் பணியாற்றி வந்துள்ளார்.

இதற்கிடையில் கடந்த புதன்கிழமை இரவு சாத்தூரப்பனின் பெற்றோர் அவரை திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் தனது அறையை பூட்டிக்கொண்டு தூங்கியுள்ளார். நேற்று(அக்.01) மதியம்வரை கதவு திறக்காத நிலையில் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவினை உடைத்துப் பார்க்கும்போது சாத்தூரப்பன் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சாத்தூர் டவுன் காவல் துறையினர் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சாத்தூரப்பன் அருகில் விஷபாட்டில் கிடந்ததையடுத்து விஷம் குடித்து இறந்துள்ளாரா? என காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் சாத்தூர் தென்வடல்புது தெருவைச் சேர்ந்தவர் அரிச்சந்திரன் (68). இவர் இடுப்பில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வேதனை தாங்க முடியாத நிலையில் வீட்டில் விஷம் அருந்தியுள்ளார்.

இதையறிந்த உறவினர்கள் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்துள்ளனர். இருப்பினும் அரிச்சந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்தும் சாத்தூர் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:சாதியின் பெயரால் குடும்பத்தையே ஊரை விட்டு விலக்கி வைத்த கொடூரம்!

ABOUT THE AUTHOR

...view details