விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் கஞ்சா விற்பணை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், அருப்புக்கோட்டை கட்டங்குடி அம்மா நகர் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது, கட்டங்குடியிலிருந்து கொளத்துப்பட்டி செல்லும் சாலையில் உள்ள சுடுகாட்டில் நின்றுகொண்டிருந்த இருவரை பிடித்த காவல் துறையினர், அவர்கள் வைத்திருந்த பையை சோதித்தனர்.
அதில், சிறிய பொட்டலங்களாக கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் இருவரும் கட்டங்குடியைச் சேர்ந்த வீரம்மாள் (50), ராஜேந்திரன் (45) என்பது தெரியவந்தது. அவர்கள் கஞ்சா விற்பணை செய்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து் இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள், இருசக்கர வாகனம், 2 ஆயிரத்து 500 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.