தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில், மாவட்ட எல்லைகளைத் தீவிரமாக கண்காணிக்க அந்தந்த மாவட்ட நிர்வாகம் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் சோதனைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இன்று விருதுநகர் மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாவட்டத்தில் இதுவரை 40 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அருப்புக்கோட்டைப் பகுதியில் கர்ப்பிணி பெண் உள்பட இருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.