தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்... சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழப்பு... - விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

விருதுநகர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.

ganesh chaturthi celebration  two killed after getting electrocuted  two killed in electrocuted at virudhunagar  virudhunagar news  விநாயகர் சதுர்த்தி  மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு  விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்  விருதுநகரில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

By

Published : Sep 1, 2022, 1:14 PM IST

Updated : Sep 1, 2022, 1:47 PM IST

விருதுநகர்: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டுவருகிறது. அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புரத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சப்பர ஊர்வலம் நடைபெற்றது.

இந்த சப்பரம் குவாலர் தெரு வளைவில் திருப்பிய போது மரத்தின் மீது மோதி நின்றது. இதனால் பக்தர்கள் சப்பரத்தை இடது புறம் திருப்ப முயன்றபோது, அங்கிருந்து விளம்பர பலகை சப்பரத்தில் மீது விழுந்து மின்சாரம் பாய்ந்தது.

இதன்காரணமாக ஐந்து பேர் மீன்சாரம் தாக்கி படுகாயமடைந்தனர். அதன்பின் அவர்கள் சிவகிரி மருத்துமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அதில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். முதல்கட்ட தகவலில் உயிரிழந்தது, அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்துவும், முனீஸ்வரனும் என்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: ஓடும் ரயிலில் பெண் காவலருக்கு கத்தி குத்து... பகிரங்க வாக்குமூலம் கொடுத்த குற்றவாளி

Last Updated : Sep 1, 2022, 1:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details