தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாட்டு வெடிகுண்டு வெடித்து இருவர் காயம்! - Bomb explodes in Virudhunagar

விருதுநகர்: வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக அனுமதியின்றி நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் காயமடைந்தனர்.

இருவர் காயம்

By

Published : Sep 4, 2019, 8:07 PM IST

விருதுநகர் அருகே உள்ள நந்தி ரெட்டியாபட்டி கிராமத்தை சேர்ந்த போதுராஜ்(50), பழனி(58) என்பவர்கள், போதுராஜ் வீட்டில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக அனுமதியின்றி நாட்டு வெடிகுண்டு தயாரித்துள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக வெடிகுண்டு வெடிதுள்ளது. வெடிச் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

நாட்டு குண்டு வெடித்து இருவர் காயம்- ஏ.எஸ்.பி சிவபிரசாத் நேரில் ஆய்வு

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், காயமடைந்த இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர்கள் மேல்சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து, ஏ.எஸ்.பி சிவபிரசாத் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ABOUT THE AUTHOR

...view details