விருதுநகர்மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி காவல் நிலையத்தில் அன்பரசன் என்பவர் இரண்டாம் நிலை காவலராகவும் ஆறுமுகவேல் என்பவர் தலைமைக் காவலராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் கடந்த மாதத்தில் நாருகாபுரம் கிராமத்தில் மர்மமான முறையில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அவரது கணவர் ஜான்பாண்டியனை விருதுநகர் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது காவலர்கள் இருவரும் இருக்கன்குடியைச் சேர்ந்த மாடேஸ்வரன் என்பவரிடம் கையில் இருந்த துப்பாக்கியை பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு டீ குடிக்க சென்றுள்ளனர்.