விருதுநகர்: சாத்தூர் அருகே தாயில்பட்டி கலைஞர் காலனியைச் சேர்ந்தவர் சூர்யா (25). இவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுவந்துள்ளார். இந்நிலையில் இன்று (ஜூன் 21) காலை பட்டாசு தயாரிப்பின்போது, ஏற்பட்ட வெடி விபத்தில் சூர்யா வீடு உள்பட, அருகருகே இருந்த ஐந்து வீடுகள் சேதமடைந்தன.
இதில் வெடி விபத்தில் சிக்கி செல்வமணி (35), கற்பகம் (35) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கி காணாமல் போன ரஃபியா சல்மா எனும் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான். மேலும் வீட்டின் உரிமையாளர் சூர்யா, சோலையம்மாள் ஆகியோர் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.