விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் கண்ணன் (40), முனீஸ்வரன் (20). இவர்கள் இருவரும் ராஜபாளையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.
இவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் சாலையின் வளைவில் வேகமாகச் சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கண்ணன், முனீஸ்வரன் ஆகிய இருவரும் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.