தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Fire accident: சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: பெண் உட்பட 2 பேர் பலி - 6 பேர் படுகாயம்! - சாத்தூரில் பேன்சி ரக பட்டாசு ரகம்

Fire accident near Sivakasi: விருதுநகர் அருகே சாத்தூரில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: பெண் உட்பட 2 பேர் பலி - 6 பேர் படுகாயம்!
சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: பெண் உட்பட 2 பேர் பலி - 6 பேர் படுகாயம்!

By

Published : Jan 19, 2023, 7:34 PM IST

சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: பெண் உட்பட 2 பேர் பலி - 6 பேர் படுகாயம்!

Fire accident near Sivakasi:விருதுநகர் மாவட்டத்தில்சாத்தூர் அருகே கனஞ்சாம்பட்டியில் சிவகாசியைச் சேர்ந்த மாயக்கண்ணன் என்பவரின் பேபி பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இதனை விஸ்வநத்தத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவர், நடத்தி வருகிறார். மேலும் இது நாக்பூர் உரிமம் பெற்று, சுமார் 70-க்கும் மேற்பட்ட அறைகளில் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் பேன்சி ரக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று(ஜன.19) பணியில் ஈடுபட்டபோது மூலப்பொருள் உராய்வினால் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும் இடிபாடுகளில் சிக்கி சத்திரப்பட்டியைச் சேர்ந்த முனீஸ்வரி என்ற பெண் மற்றும் ஒரு ஆண் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர் உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்த 4 தீயணைப்புப் படை வீரர்கள் இடிபாடுகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க:சென்னையில் வருமான வரித்துறை பெண் அதிகாரியிடம் பாலியல் சீண்டல்

ABOUT THE AUTHOR

...view details