விருதுநகர் அருகே ஆமத்தூரில் விருதுநகர் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் பிரியா தலைமையில், உதவி ஆய்வாளர் அசோக், காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டனர். சோதனையில் விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்த சீனிவாசன் (30), சங்கரவேல்(30) ஆகியோர் சிவகாசியிலிருந்து விருதுநகருக்கு ரேசன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.
விருதுநகரில் ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது - ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது
விருதுநகர்: ஆமத்தூர் அருகே ரேஷன் அரிசி கடத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்யதனர்.

arrest
அவர்களை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து 50 மூட்டைகளில் 2,500 கிலோ ரேசன் அரிசியையும் லோடு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.