இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாடு அரசு அறிவித்தபடி இன்றிலிருந்து (மார்ச் 24) மாலை 6 மணி முதல் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாமலிருக்க தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 190 பேர் தொடர் கரோனா கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து பேசிய அவர், “மாவட்டத்தின் 28 கல்லூரி விடுதிகளைத் தேர்ந்தெடுத்து அதில் எட்டாயிரம் படுக்கைகள் அமைக்கப்பட்டு, ஒரே நேரத்தில் எட்டாயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கும் படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 300 அவசர கால சிகிச்சை படுக்கைகள் தயார் நிலையிலுள்ளது” எனத் தெரிவித்தார். அதையடுத்து அவர், 16 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது.