தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொண்டு நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி!

விருதுநகர்: தனியார் தொண்டு நிறுவனம் சார்பாக நீரை சேமிக்க வேண்டும் என பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

awareness marathon

By

Published : Aug 18, 2019, 11:37 AM IST

விருதுநகர் மாவட்டத்தில் தனியார் தொண்டு நிறுவனம் பொதுமக்களிடையே நீர் சேமிப்பு, நீர் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த 15 வயதிற்கு மேற்பட்டோர் கலந்துகொள்ளும் மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் விருதுநகர் சிவகாசி ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்துகொண்டனர்.

விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

இந்த மினி மாரத்தான் போட்டிகள் 15 வயது முதல் 39 வயதுவரை உள்ளவர்களுக்கு தனியாகவும் 40 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தனியாகவும் நடத்தப்பட்டன. 6 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த மினி மராத்தான் போட்டி விருதுநகர் தனியார் கல்லூரியில் தொடங்கி அருப்புக்கோட்டை வழியாக சென்று மதுரை சாலையில் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி நிறைவடைந்தது.

ஓட்டப்பந்தயத்தில் 15 வயது முதல் 39 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் சிவகாசி தனியார் கல்லூரியில் பயிலும் குணசீலன் முதலிடம் பிடித்தார். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் விருதுநகரைச் சேர்ந்த ராஜா, வேல் முதல் இடம் பிடித்தனர். வெற்றிபெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details