விருதுநகர் மாவட்டம், ஆமத்தூர் கிராமத்தில் இயங்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 650க்கும் அதிகமான மாணவ - மாணவிகள் பயின்றுவருகின்றனர். இந்தப் பள்ளியில் தற்போது அடிப்படை தேவையான குடிநீர் வசதி இல்லாததால் மாணவ - மாணவிகள் நீண்ட தூரம் நடந்துசென்று குடிநீர் எடுத்துவர வேண்டிய நிலை உள்ளது.
அரசுப் பள்ளிக்கு தண்ணீர் தொட்டி அமைத்து கொடுத்த முன்னாள் மாணவர்கள் - goverment school
விருதுநகர்: 20 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் அரசுப் பள்ளிக்கு தண்ணீர் தொட்டி அமைத்து கொடுத்துள்ளது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
goverment school water tank
இதையறிந்த அப்பள்ளியில் 1999ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற 75 முன்னாள் மாணவர்கள் இணைந்து தாங்கள் படித்த பள்ளிக்கு ரூ.1லட்சம் மதிப்பிலான 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி அமைத்து தந்துள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இது குறித்து அப்பள்ளியின் தலைமையாசிரியர் கூறுகையில், ’அரசை நம்பாமல் முன்னாள் மாணவர்கள் இதுபோல் இணைந்து செயல்பட்டாலே மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் தரம் உயரும்’ என்றார்.