விருதுநகர் மாவட்டம் குமாரலிங்கபுரம் அருகே ராஜீவ் காந்தி என்பவர் தனது நண்பருடன் விருதுநகர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த தனியார் சுற்றுலா பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியது.
விருதுநகரில் இருசக்கர வாகன விபத்து - ஒருவர் பலி - bike and bus collision
விருதுநகர்: தனியார் சுற்றுலா பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இருசக்கர வாகன விபத்தில் சிக்கி ராஜீவ் காந்தி என்பவர் உயிரிழப்பு
இதில் சம்பவ இடத்திலேயே ராஜீவ்காந்தி உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் போராடிய அவரது நண்பர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த விபத்து பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.