பாலசெல்வன் விருதுநகரிலுள்ள தனியார் பள்ளியில் பத்தாம் படித்துவருகிறார். இந்நிலையில் அவர் நேற்றுறு பின்னோக்கி செய்யும் யோக ஆசனங்களான சக்ரபந்தாசனம், நடராஜா ஆசனம், வாலக்கிளி ஆசனம், விபரீத சலபாசனம் மற்றும் பூர்ண புஜங்காசனம் உள்ளிட்ட 302 ஆசனங்களை ஆறு நிமிடம் 51 வினாடிகளில் செய்து முடித்து உலக சாதனை படைத்துள்ளார்.
பத்தாம் வகுப்பு மாணவன் யோகாவில் உலக சாதனை - மாணவன்
விருதுநகர் : பத்தாம் வகுப்பு மாணவன் 302 ஆசனங்களை 6.51 வினாடிகளில் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
10 வகுப்பு மாணவன் யோகாவில் உலக சாதனை
இந்த சாதனை நிகழ்ச்சி யுனிவர்சல் அச்சிவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் மற்றும் சேர்மன் டாக்டர் பாபு பாலகி௫ஷ்ணன் மற்றும் அதே நிறுவன சிஈஓ உமா ஆகியோரின் முன்னிலையின் நடத்தப்பட்டு பதிவு செய்யப்பட்டது. பாலசெல்வனின் சாதனையை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்து சான்று பெற உரிய ஆவணங்களுடன் அனுப்பி வைக்கப்பட்டது. சாதனை மாணவன் பாலசெல்வனுக்கு பாராட்டுக்கள் குவிந்துவ௫கிறது.