தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நிலவில் விண்வெளி ஆய்வு மையம்... சந்திராயன்-2 உதவியாக இருக்கும்'

விருதுநகர்: விண்ணில் செலுத்தப்படவிருக்கும் சந்திராயன்-2 விண்கலம் நிலவில் விண்வெளி ஆய்வு மையம் அமைக்க உதவியாக இருக்கும் என இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.

நிலவில் விண்வெளி ஆய்வு மையம்-சந்திராயன் 2

By

Published : Jul 19, 2019, 5:53 PM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் பல்கலைக் கழக அறிவியல் கண்காட்சியில் கலந்துகொண்ட இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, "2008ஆம் ஆண்டு இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட சந்திராயன் நிலவில் நீர் உள்ளது என்பதை கண்டறிந்தது. இதனால் மற்ற உலக நாடுகள் அனைத்தும் மீண்டும் நிலவுக்குச் செல்ல வேண்டும் என்ற ஒரு முடிவை எடுக்க இந்தியா பெரும் உந்துசக்தியாக இருந்தது.

நிலவில் விண்வெளி ஆய்வு மையம்-சந்திராயன் 2

வரும் 22ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படவிருக்கும் சந்திராயன்-2 விண்கலம் நிலவில் விண்வெளி ஆய்வு மையம் அமைய உதவியாக இருக்கும். மேலும் அங்கு சுற்றுலா மையம் அமைப்பதற்காகவும் பெரும் உதவியாக இருக்கும்" என அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details