விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள அப்பணம்பட்டி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்கள் அருகில் இருக்கும் முத்தாண்டியபுரம் கிராமத்திற்கு சென்று பல ஆண்டுகளாக ரேசன் பொருட்கள் பெற்றுவந்தனர்.
புதிய ரேசன் கடை அமைத்துத் தரவேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு
விருதுநகர்: சாத்தூர் அருகிலுள்ள அப்பணம்பட்டி கிராமத்தில் புதிய ரேசன் கடை அமைத்துத் தரவேண்டி மாவட்ட ஆட்சியரிடம் ஊர் பொதுமக்கள் மனு அளித்தனர்.
இந்நிலையில், இரண்டு ஊர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையைால் முத்தாண்டியபுரம் சென்று ரேசன் பொருட்களை பெறுவதற்கு அச்சமாக உள்ளது எனவும், மூன்று மாதகாலமாக ரேசன் பொருட்கள் எதுவும் வாங்கவில்லை எனவும் அப்பணம்பட்டி கிராம மக்கள் தெரிவித்தனர். இதனால், அப்பணம்பட்டி கிராமத்தின் அருகே புதிய ரேசன் கடை அமைத்து தரக்கோரி ஊர் பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
புதிய ரேசன் கடை அமைத்துத் தர மறுத்தால் வரும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பு செய்வதாகவும், ஊர் மக்களின் ரேசன் அட்டையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப் போவதாகவும் பொதுமக்கள் எச்சரித்தனர்.