விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிர்மலாதேவி வழக்கு சம்பந்தமாக செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை, செய்தி சேகரிக்க விடாமல் தாக்கிய காவல்துறையை கண்டித்து, விருதுநகர் மாவட்ட பத்திரிகையாளர் சங்கத் தலைவர் நாகராஜ் தலைமையில் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
போலிஸ் தாக்குதலைக் கண்டித்து செய்தியாளர்கள் ஆர்பாட்டம் - மாவட்ட ஆட்சியர் சிவஞானம்
விருதுநகர்: வழக்கு விசாரணைக்காக நிர்மலாதேவியை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தபோது, செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்ககோரி ஊடகத்துறை சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
விருதுநகர் செய்தியாளர்கள் ஆர்பாட்டம்
தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்களை எழுப்பினர். பின்னர் அதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராசராசன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவஞானத்திடம் புகார் மனு அளித்தனர்.