விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் நடைபெற உள்ள சட்டப்பேரவை இடைத்தோ்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளாரை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வதற்காக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இன்று சாத்தூருக்கு வருகை தந்தார்.
அப்போது செய்தியாளா்களிடம் பேசிய அவர், “திமுக ஒரு போதும் பாமகவுடன் கூட்டணி பற்றி பேசவில்லை. அதேபோல் தருமபுரியில் வெற்றி பெற்ற பின் அந்த மக்களுக்கு எதுவும் செய்யாததற்கு அன்புமணி ராமதாஸ் முதலில் அந்த மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.