விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மதுரை செல்லும் பிரதான சாலையில் உள்ள தனியார் (எச்டிஎஃப்சி) வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இதில் இன்று காலை மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏடிஎம் இயந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த பணம் முழுவதும் எரிந்து சாம்பலானது.
மின் கசிவினால் தீப்பற்றி எரிந்த ஏடிஎம்! - Fire accident
விருதுநகர்: அருப்புக்கோட்டையில் மதுரை சாலையில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம் மையத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் எரிந்து நாசமாகின.

atm-fire
மின் கசிவினால் தீப்பற்றி எரிந்த ஏடிஎம்!
தகவலறிந்த அருப்புக்கோட்டை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என்று தெரிவித்த காவல்துறையினர், ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பணம் எவ்வளவு என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.