விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு, தோல்சாப் சூலக்கரை, பெரியவள்ளிகுளம் போன்ற பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்தது. உச்சக்கட்ட வெயிலான அக்னி நட்சத்திரம் மற்றும் கத்தரி வெயிலால் மக்கள் அவதியடைந்து வந்தன நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
விருதுநகரில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழையால் மக்கள் மகிழ்ச்சி! - thunder
விருதுநகர்: 20 நிமிடத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் கத்திரி வெயில் தாக்கத்தில் இருந்து விருதுநகர் மக்கள் சிறிது நேரம் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
விருதுநகரில் இடி , மின்னலுடன் கூடிய பலத்த மழையால் மக்கள் மகிழ்ச்சி.
இந்த நிலையில், இன்று மாலை திடீரென வெப்பம் குறைந்து சுமார் 20 நிமிடத்திற்கும் மேலாக பலத்த காற்று, இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இந்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியுள்ளது. அக்னி நட்சத்திரம் மற்றும் கத்திரி வெயில் தொடர்ந்து இருந்து வந்த நிலையில் இப்போது பெய்த மழையால் வெப்பம் தனிந்து பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.