விருதுநகர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கண்ணன் இன்று (மார்ச்3) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2021ஐ முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களிடமிருந்து நேரில் மற்றும் ஆன்லைன் மூலமாக பெயர் திருத்தம், முகவரி மாற்றம், புகைப்படம் மாற்றம் (Form 8 and Form 8A) போன்ற படிவங்கள் பெறப்பட்டன.
வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்தீர்களா? இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்! - Final voter list
விருதுநகர்: இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் திருத்தப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை இ-சேவை மையத்தினை அணுகி பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட படிவங்கள் மீது அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் மேற்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டதோடு, கடந்த 20.01.2021 அன்று இறுதி வாக்காளர் பட்டியலானது வெளியிடப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள், நகல் வாக்காளர் வண்ண புகைப்பட அடையாள அட்டையை பெற, தங்கள் வசிப்பிடத்திற்கு அருகிலுள்ள வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் இ-சேவை மையத்தினை அணுகி ரூ.25/- (ரூபாய் இருபத்தைந்து மட்டும்) செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2021; அரசியல் கட்சிகளின் கூட்டணி நகர்வுகள் உடனுக்குடன்!