விருதுநகர் மாவட்டம் பாவாலியைச் சேர்ந்தவர், கல்லூரி மாணவர் ரவிச்சந்திரன் (18). இவர் இன்று காலை 8 மணியளவில் பாவாலியில் இருந்து விருதுநகருக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து ரவிச்சந்திரன் உடலை உடற்கூறாய்வுகாக அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு கொண்டு சென்றனர்.
அரசு மருத்துவர்களின் அலட்சியம் : சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் - accident
விருதுநகர் : பாவாலியைச் சேர்ந்த கல்லூரி மாணவரின் உடலை உடற்கூறாய்வு செய்யாமல் மருத்துவர்கள் அலட்சியமாக நடந்து கொண்டதால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆனால் காலையில் கொண்டு செல்லப்பட்ட உடல் மாலை வரை உடற்கூறாய்வு செய்யாமல் பிணவறையில் வைக்கப்பட்டது. இதுகுறித்து உறவினர்கள் மருத்துவமனையை அணுகியபோது மருத்துவர்கள் இல்லை எனவும் அவர்கள் வேறு வேலையாக உள்ளார்கள் எனவும் அலட்சியமாக பதிலளித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த ரவியின் உறவினர்கள் அரசு மருத்துவமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு உடற்கூறாய்வு செய்யப்பட்டது.