இந்த வாக்காளர் பட்டியலிலானது படிவம் 6-இல் வரப்பெற்ற 44,740 மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியுள்ள 42,320 நபர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தின் ஏழு சட்டப்பேரவை தொகுதிகளிலும், ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.
அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட ஆட்சியர் - undefined
விருதுநகர்: மாவட்டத்தின் ஏழு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியர் வெளியிட்டார்.
சிவகாசி சட்டப்பேரவை தொகுதியில் அதிக பட்சமாக 2,53,964 வாக்காளர்கள் உள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளின் மொத்த ஆண் வாக்காளர்கள் 795,507, பெண் வாக்காளர்கள் 834,609, இதர வாக்காளர்கள் 180 என மொத்தமாக 1,630,296 உள்ளனர். எதிர்காலத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்ய விரும்பும் நபர்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்அலுவலகங்களில் உள்ள தேர்தல் பிரிவில் விண்ணப்பங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
TAGGED:
Tn vnr collector function