தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் - தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: வங்கி நிர்வாகத்தைக் கண்டித்து தமிழ்நாடு கிராம வங்கி அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

TN gram bank workers protest against management
தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

By

Published : Jul 25, 2020, 2:07 PM IST

தமிழ்நாடு கிராம வங்கி அலுவலர்கள் சங்கம் சார்பில், வங்கி நிர்வாகத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த வங்கியில் பணிபுரியும் 2 ஆயிரத்து 500 ஊழியர்களில் 25க்கும் மேற்பட்டோர் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மண்டல அலுவலகத்தில் பணிபுரிந்த சீனிவாசன் என்பவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். தற்போது வரை அவருக்கு உரிய நிவாரணம் வழங்கவில்லை. மேலும், வங்கி நிர்வாகம் ஒரு இரங்கல் செய்திகூட வெளியிடவில்லை.

ஊழியர்களையும், வாடிக்கையாளர்களையும் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. கர்ப்பிணிகள், வயதானவர்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:விஏஓ மட்டுமல்ல நான்... சமூக சேவையில் ஈடுபடும் விருதுநகர் இளைஞர்!

ABOUT THE AUTHOR

...view details