விருதுநகர்: சாத்தூர் அருகே உள்ள தாயில்பட்டியில் வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்துள்ளனர். அந்த வீட்டில் கடந்த திங்கள்கிழமை (ஜூன் 21) ஏற்பட்ட வெடி விபத்தில் ஐந்து வயது குழந்தை, நான்கு மாத கர்ப்பிணி உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இருவர் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த வெடி விபத்தில் ஐந்து வயது குழந்தை உயிரிழந்ததை அடுத்து, தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ராம்ராஜ் நேரில் சென்று சம்பவ இடத்தை ஆய்வுசெய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இதுபோன்று சட்டவிரோதமாக வீடுகளில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐந்து வயது குழந்தை, கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்ப்பிணி நான்கு மாத குழந்தையை வயிற்றில் சுமந்திருந்ததால் அதுவும் எங்களுக்கு ஒரு உயிராகவே கருதப்படும்.