தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமாவளவன் திமுகவிற்கு தான் டியூஷன் எடுக்க வேண்டுமே தவிர பாஜகவில் அல்ல - பாஜக பொதுச் செயலாளர் சீனிவாசன்

திருமாவளவன் திமுகவிற்கு தான் டியூஷன் எடுக்க வேண்டுமே தவிர பாஜகவிற்கு அல்ல என தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

tn-bjp-general-secretary-srinivasan-says-situation-in-sri-lanka-may-even-be-tears-of-sita-and-it-may-even-be-result-of-that-curse இலங்கை: இது ஒருவேளை சீதையின் கண்ணீராக கூட இருக்கலாம்.. அந்த சாபத்தினால் ஏற்பட்ட விளைவாகக் கூட இருக்கலாம் OR திருமாவளவன் திமுகவிற்கு தான் டியூஷன் எடுக்க வேண்டுமே தவிர பாஜகவில் அல்ல -  பாஜக பொதுச் செயலாளர் சீனிவாசன்
tn-bjp-general-secretary-srinivasan-says-situation-in-sri-lanka-may-even-be-tears-of-sita-and-it-may-even-be-result-of-that-curse இலங்கை: இது ஒருவேளை சீதையின் கண்ணீராக கூட இருக்கலாம்.. அந்த சாபத்தினால் ஏற்பட்ட விளைவாகக் கூட இருக்கலாம் OR திருமாவளவன் திமுகவிற்கு தான் டியூஷன் எடுக்க வேண்டுமே தவிர பாஜகவில் அல்ல - பாஜக பொதுச் செயலாளர் சீனிவாசன்

By

Published : May 14, 2022, 7:57 AM IST

விருதுநகரில்புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் கலந்துகொண்டு புதிதாகப் பொறுப்பேற்ற நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இலங்கையில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டமானது இந்தியாவில் நடைபெறுவதற்கு வெகு நேரம் ஆகாது என திருமாவளவன் கூறிய கருத்திற்கு பதிலளித்த சீனிவாசன், ராஜபக்சே தப்பிச் சென்றது, தற்போது பாதுகாப்பாக இருப்பது பற்றிய கதைகள் பேசுவதற்கு இது நேரமில்லை.

அங்கு இருக்கக்கூடிய மக்கள் மருந்து, உணவு பொருட்கள் இல்லாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். மேலும் பெட்ரோல், டீசல் இல்லை, ஒட்டு மொத்த பொருளாதாரமும் முடங்கி இருக்கிறது. எனவே ஒட்டு மொத்த பாரதமும் இலங்கை மக்களோடு இருப்போம். அவர்களுக்குப் பாதுகாப்பாய். இது ஒருவேளை சீதையின் கண்ணீராக கூட இருக்கலாம் அந்த சாபத்தினால் ஏற்பட்ட விளைவாகக் கூட இருக்கலாம்.

ஒரே குடும்பத்தில் இருப்பவர்கள் அதிகாரத்திலும், ஆட்சியிலும் இருந்தால் அந்த சமுதாயமும், நாடும் என்ன ஆகும் என்பதற்கு இலங்கை ஒரு உதாரணம். அதே போல் தமிழ்நாடு ஆகிவிடக்கூடாது என்று திருமாவளவன் தான் முதலமைச்சர் ஸ்டாலினை எச்சரிக்க வேண்டும். தமிழகத்திலேயே குடும்ப ஆட்சி தான் இன்று நடந்து கொண்டிருக்கிறது.

சட்டப்பேரவையில் பேசக்கூடிய உறுப்பினர்கள் கூட எழுதி வைத்துக்கொண்டு உதயநிதி ஸ்டாலினை பற்றி பேச வேண்டிய சூழ்நிலை என்ன இருக்கிறது. நாடாளுமன்றத்தில் பேசக்கூடிய யாராவது மோடியை பற்றி புகழ்ந்து பேசுகிறார்களா? ஒரு குடும்பத்தைத் தூக்கிப் பிடிக்க கூடிய சூழல் ஒரு கட்சிக்கே ஏற்பட்டிருக்கிறது.

இதனால் இலங்கையிடம் இருந்து திமுக தான் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். திருமாவளவன் திமுகவிற்கு தான் டியூஷன் எடுக்க வேண்டுமே தவிர பாஜகவில் அல்ல. இந்த திருமாவளவனுடைய கருத்தை நான் அறிவாலயத்திற்கு சமர்ப்பிக்கிறேன்" என்றார்.

தமிழ்நாட்டில் பழைய பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்த முடியாது என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் குறிப்பிடுகிறார் இதைப் பற்றி உங்கள் கருத்து என கேட்டதற்குத், "தமிழ்நாட்டில் பழைய பென்ஷன் திட்டத்தை அறிவிக்க முடியாது என்று போன ஏப்ரல் 6-ஆம் தேதிக்கு முன்பே தான் சொல்லியிருக்க வேண்டும். தற்போது சொல்லியிருக்கக் கூடாது.

இதற்காக நீதிமன்றம் செல்ல வேண்டும். இது ஒரு அப்பட்டமான ஏமாற்று வேலையாக உள்ளது. எத்தனையோ லட்சம் அரசு ஊழியர்கள் பழைய மாதிரியான பென்ஷன் திட்டங்கள் கிடைக்குமென நம்பி தான் அவர்கள் வீட்டில் உள்ள அனைவரும் திமுகவுக்கு வாக்களித்தும் விட்டனர்.

முடியாது என்று தெரிந்தும் அறிவித்திருப்பது பித்தலாட்டம் தானே. இதற்காகத் நிதி அமைச்சரும், முதலமைச்சரும் அரசு ஊழியர்களிடம் நாங்கள் பொய் சொல்லி விட்டோம் எனப் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். முடியாது என்பது ஒரு வருடம் கழித்துத்தான் தெரியுமா? ஒரு வருடம் முன்பே தெரியாதா? இது ஏமாற்று வேலை. பிஜேபி இது போன்ற வாக்குறுதிகளைத் தந்ததா இல்லையே.

நிர்மலா சீதாராமன் அதிகமாக ஜிஎஸ்டி தரும் மாநிலமான தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமல் மற்ற மாநிலங்களுக்கு அதிக நிதி வழங்குவதாகா பொய்யான பிரச்சாரத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதாவது தமிழ்நாடு உற்பத்தி மாநிலம். பிற மாநிலங்கள் நுகர்வு மாநிலங்கள் ஆக இருந்தாலும் தமிழகத்திற்கு வரவேண்டிய ஜிஎஸ்டி நிதிகளை மத்திய அரசு வழங்கிக் கொண்டு தான் இருக்கிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரைக் கொங்கு மண்டலத்தில் இருந்து தான் அதிகப்படியான ஜிஎஸ்டி வருகிறது. அதற்காகத் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படும் நிதியை கொங்கு மண்டலத்திற்குத் தான் அதிகமாக செலவழிக்க வேண்டும் என மத்திய அரசு கூறலாமா என்ற கருத்தின் படி தான் நிர்மலா சீதாராமன் கூறினார்" என தெரிவித்தார்.

மேலும், எதிர்மறை அரசியலில் பேசியே ஆட்சி செய்கின்ற திமுகவை தற்போது பலர் எதிர்க்கிறார்கள். திமுக கட்சியில் இருக்கக்கூடிய குடும்பத்தினர் சிலருடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அவர்களே இதை எதிர்த்து வருகிறார்கள். அவர்கள் தற்போது வளர்ச்சியை விரும்புகிறார்கள். அதற்கான முன்னெடுப்பு எடுக்கக்கூடிய நரேந்திர மோடியின் தலைமையை விரும்புகிறார்கள். விரும்புபவர்கள் தொடர்ச்சியாக திமுகவில் இருந்து பாஜகவில் இணைவார்கள்" என்று பேசினார்.

இதையும் படிங்க: 'சஞ்சீவி மலையை சுமந்த அனுமனைப்போல, மோடி இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சுமக்கத் தயார்' - அண்ணாமலை பேச்சு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details