விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, மான், மிளா, காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வசித்து வருகின்றன.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான செண்பகத்தோப்பு சுற்றுலா தளத்தில் புலி ஒன்று உலா வருவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை - செண்பகத்தோப்பு விசாரணையில் வேறு ஒரு வனப்பகுதியில் அந்த புலி உலா வருவது ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினருக்கு தெரியவந்தது. இந்நிலையில், பொதுமக்களிடையே பீதியை கிளப்பி தவறான தகவலை பரப்பி அச்சுறுத்தலை ஏற்படுத்திய நபர்களைக் கைது செய்யும் பணியில் வனத்துறையினரும் காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க:
அரசு உதவிக்காக காத்திருக்கும் அகல் விளக்கு தயாரிக்கும் பெண்மணி!