விருதுநகர் அருகே உள்ள பாலவனத்தம் கிராமத்தைச் சேர்ந்த வினோத் பாண்டி (33), பிரதீப் (28). இருவரும் சகோதரர்கள். வினோத் பாண்டி வெல்டிங் பட்டறையிலும், பிரதீப் தனியார் நிறுவனத்திலும் பணி புரிந்து வருகின்றனர்.
இருசக்கர வாகனத்தில் சென்ற சகோதரர்களின் மீது இடி தாக்கியதில் ஒருவர் பலி! - பலி
விருதுநகர் : இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த சகோதரர்கள் மீது இடி தாக்கியதில் தம்பி பலியானார், அண்ணன் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், இருவரும் நேற்று மாலை பாலவனத்தம் பகுதியிலிருந்து விருதுநகருக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக இடி தாக்கியதில் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பி பிரதீப் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். மேலும், அண்ணன் வினோத் பாண்டிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
பின்பு, அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு அருகில் உள்ள விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இடி தாக்கியதில் அண்ணன் படுகாயமடைந்து, தம்பி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.