தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் பாரில் மது விற்பனை செய்த மூன்று பேர் கைது - 4706 மதுபாட்டில்கள் பறிமுதல்

விருதுநகர்: ஊரடங்கு உத்தரவை மீறி, தனியார் பாரில் மதுபானம் விற்பனை செய்த மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

drinking
drinking

By

Published : May 3, 2020, 1:24 PM IST

இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்க, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மதுபானக் கடைகள் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி, சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்களை காவல் துறையினர் கைது செய்து, உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதியில், செயல்பட்டு வரும் பார்களில் 144 தடை உத்தரவை மீறி, மதுபானம் விற்கப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், காவல் துறை உதவிக் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையிலான காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேரைக் கைது செய்து, அவர்களிடமிருந்து 336 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஊரடங்கு உத்தரவை மீறி, மது விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த ரூ. 10 லட்சம் மதிப்புடைய 4 ஆயிரத்து 706 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார்

இதனையடுத்து, மதுபாட்டில்களை பதுக்ககி வைத்திருந்தவர்கள் மீது விருதுநகர் கிழக்குக் காவல் நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:சீனாவிலிருந்து வெளியேறும் நிறுவனங்களை ஈர்க்க அருமையான வாய்ப்பு-நிதின் கட்கரி

ABOUT THE AUTHOR

...view details