தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போதையில் ரகளை: பாதுகாப்புப் படை வீரர்கள் 3 பேர் கைது! - alcoholism

விருதுநகர்: மதுபோதையில் பெட்டிக்கடைக்காரா், உதவி ஆய்வாளரிடம் தகராறில் ஈடுபட்ட மூன்று பாதுகாப்புப் படை வீரா்களை காவல் துறையின கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

பாதுகாப்புப் படை வீரர்கள் மூன்றுபேர் கைது

By

Published : Jun 19, 2019, 12:24 PM IST

விருதுநகா் மாவட்டம், சாத்தூர் அடுத்த ஏழாயிரம்பண்ணை பகுதியில் கருப்பசாமி என்பவர் பெட்டிக் கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு சிப்பிபாறையைச் சேர்ந்த பாதுகாப்புப் படை வீரா்களான சங்கத்துரை (33) ரமேஷ்குமார் (30), மாரிச்சாமி (28) ஆகிய மூவரும் மது போதையில் வந்து புகையிலை கேட்டுள்ளனர்.

அதற்கு கருப்பசாமி குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்க அரசு தடை விதித்துள்ளதால், அவற்றை விற்பனை செய்வதில்லை எனக் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் அதை கேட்காமல், கருப்பசாமியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து அவர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து வந்த ஏழாயிரம்பண்ணை காவல் நிலைய உதவி ஆய்வாளர், காவலர்கள், தகராறில் ஈடுபட்ட மூன்று பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அப்போது போதை அதிகமாகி, உதவி ஆய்வாளரிடமும் அவர்கள் தகராறில் ஈடுபட்டனர். இந்நிலையில் மூவர்மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details