தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு - Virudhunagar district news

விருதுநகர்: தனியார் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

By

Published : Jan 14, 2021, 8:48 PM IST

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜனார்த்தன ராஜா(65). இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூர் மாவட்டத்தில் நிரந்தரமாக குடியேறினார். தொடர்ந்து வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.

கரோனா காலத்தில் கோயம்புத்தூரில் உள்ள வீட்டுக்கு வந்தார். இந்நிலையில், ராஜபாளையத்தில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு ஜனார்ந்தன ராஜா தனது மனைவி கலாவதி(45), மகன் சித்தார்த்(17) ஆகியோருடன் வந்தார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

பின்னர் அங்குள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்தனர். அப்போது அவர்கள் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதில் சிறுவன் விடுதியிலேயே உயிரிழந்தார். தம்பதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: குளிக்கச் சென்றபோது பாறையில் வழுக்கி விழுந்து இளைஞர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details