தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசுப் பேருந்து மீது கார் மோதி விபத்து: 3 பேர் பலி - three dead

விருதுநகர்: தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

அரசுப் பேருந்தில் கார் மோதி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

By

Published : Jul 2, 2019, 3:21 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மஞ்சநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்(82). இவர் தன்னுடைய மனைவி கமலம்(75), உறவினர் சேகர் (52) ஆகிய மூவரும் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கேரளா மநிலம் திருவனந்தபுரத்துக்கு காரில் சென்று கொண்டு இருந்தனர். காரை ஓட்டுநர் அய்யப்பன் என்பவர் இயக்கி வந்துள்ளார்.

அரசுப் பேருந்தில் கார் மோதி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

இந்நிலையில், மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் அரசு போக்குவரத்து பணிமனை அருகே சென்றபோது, அரசுப் பேருந்தின் பின் பக்கம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் சென்ற சுப்பிரமணியன் (82), கமலம் (75), சேகர் (52) ஆகிய மூவரும் உயிரிழந்தனர். கார் ஓட்டுனர் அய்யப்பன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த விருதுநகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details