விழுப்புரத்தில் தடைசெய்யப்பட்ட இணைய லாட்டரி மோகத்தால் கடனாளியான நகைத்தொழிலாளி அருண் தன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் தடைசெய்யப்பட்ட இணைய லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்களை காவல்துறையினர் தேடிப்பிடித்து கைதுசெய்து வருகின்றனர்.
இச்சூழலில் அருப்புக்கோட்டையில் தடைசெய்யப்பட்ட இணைய வழி லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததது. தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இணைய லாட்டரி விற்பனை செய்ததாக வேல்முருகன் காலணியைச் சேர்ந்த சக்திவேல், நாகலிங்க நகரைச் சேர்ந்த சிவசங்கரன், நெசவாளர் நகரைச் சேர்ந்த கருப்பசாமி ஆகிய மூவரை கைது செய்தனர்.