விருதுநகர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் கோகுலம் தங்கராஜை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரப்புரை மேற்கொண்டார்.
விருதுநகர் நான்கு வழிச் சாலையில் தேர்தல் விதிமுறைப்படி அங்கிருந்த எம்ஜிஆர் சிலை மூடிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் டிடிவி தினகரன் வருவதையொட்டி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மூடிவைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் சிலையில் இருந்த துணியைத் திறந்துவைத்தனர்.