தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு டாஸ்மாக் கடையின் காவலாளியை வெட்டிவிட்டு மதுபாட்டில்கள் திருட்டு - tamilnadu latest news

விருதுநகர்: அரசு டாஸ்மாக் கடையின் காவலாளியை வெட்டிவிட்டு 50க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை திருடிச் சென்ற கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

மதுபாட்டில்கள் திருட்டு
மதுபாட்டில்கள் திருட்டு

By

Published : Jan 26, 2021, 2:26 PM IST

விருதுநகர் மாவட்ட நெடுஞ்சாலையில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இங்குள்ள பாரில் 4 பேர் நுழைந்து மதுபாட்டில்கள் வேண்டும் என கத்தியை காட்டி காவலாளியிடம் மிரட்டினர்.

அதன் காவலாளி தன்னிடம் சாவி கிடையாது என கும்பலிடம் கூறினார். உடனே ஆத்திரமடைந்த அவர்கள் காவலாளியின் தலையில் வெட்டினர். தொடர்ந்து டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 50க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை திருடிச் சென்றனர்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் இதுபோன்று திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சுற்றுப்புறத்தை பாழாக்கும் மதுபாட்டில்கள்- பயனுள்ளதாக மாற்றும் பட்டதாரி பெண்!

ABOUT THE AUTHOR

...view details