விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் அருண்பாண்டி (24). கொத்தனாரான இவர் விருதுநகர் டவுன் அடுத்த ஆத்துபாலம் அருகே நண்பர் சதீஸ்குமாருடன் சென்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர் அவரை ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்தனர். இதில் சதீஸ்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
முன்விரோதம் காரணமாக கொத்தனார் ஓட ஓட வெட்டிக் கொலை! - கொத்தனார்
விருதுநகர்: முன்விரோதம் காரணமாக கொத்தனார் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சதீஸ்குமாரை மீட்டு சிகிச்சைக்காகவும் அருண்பாண்டியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காகவும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி-வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் முன்விரோதத்தில் கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் விருதுநகரைச் சேர்ந்த குரங்கு விஜய், முத்தழகு, ஏஞ்சல் செல்வம் ஆகிய மூன்று பேரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.