விருதுநகர் :சாத்தூர் அருகே தூங்காரெட்டியபட்டி கிராமத்தில் சண்முகநாதன் (50) என்பவருக்கு சொந்தமான வீட்டின் மாடியில் புதுபிக்கும் பணிக்கான கட்டுமான வேலை நடைபெற்று வந்தது. இந்த பணியில் 5க்கும் மேற்பட்ட கட்டட தொழிலாளிகள் பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில் வீட்டின் மாடி சுவற்றின் ஒரு பகுதியை இடித்து கொண்டியிருக்கும் போது திடீரென்று மற்றொரு சுவர் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கட்டட பணியில் ஈடுபட்டு கொண்டியிருந்த ஏழாயிரம் பண்ணையைச் சேர்ந்த முருகன் (50) மற்றும் முத்தாண்டியாபுரத்தைச் சேர்ந்த சண்முகநாதபாண்டியன்(46) கார்த்தி (22), மணிகண்டன் (26), ஆகிய 4 பேரும் காயமடைந்தனர்.