தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிள்ளைகளால் கைவிடப்பட்ட மூதாட்டியின் வீடு நாசம்! - மூதாட்டிக்கு நடந்த சோகம்

விருதுநகர்: பிள்ளைகளால் கைவிடப்பட்ட 80 வயது மூதாட்டியின் வீடு எரிந்து ஏராளமான பொருள்கள், ஐந்தாயிரம் ரூபாய் நாசமாகின.

மூதாட்டிக்கு நடந்த சோகம்
மூதாட்டிக்கு நடந்த சோகம்

By

Published : Feb 18, 2020, 4:01 PM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேட்டுத்தெரு பகுதியில் தெய்வானை என்ற 80 வயது மூதாட்டி தன் பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் தனியே வசித்துவருகிறார்.

இந்நிலையில், தனது வீட்டில் சமையல் வேலை செய்துவிட்டு தீயை அணைக்காமல் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தீ பரவி வீடு முழுவதும் எரிந்து, அருகிலுள்ள வீட்டிலும் தீ பரவியது.

இந்நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறையினர், ஒரு மணி நேரம் போராடி அத்தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

மூதாட்டியின் வீடு எரிந்து நாசம்

இந்தத் தீ விபத்தில் மூதாட்டி வீட்டிலிருந்த துணிகள், பாத்திரங்கள் எரிந்து நாசமாகின. மேலும் மூதாட்டி தலையணைக்கு அடியில் வைத்திருந்த 5,000 ரூபாய் பணமும் தீயில் எரிந்து நாசமானது.

மேலும், மூதாட்டி வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றதால் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து நகர காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படியுங்கள்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் முதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொறுப்பேற்பு!

ABOUT THE AUTHOR

...view details