தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் உண்டியலை திருட முயன்ற கொள்ளையர்கள்- வெளியான சிசிடிவி வீடியோ

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையம் அருகே கோவில் உண்டியலை அடையாளம் தெரியாத நபர்கள் திருட செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

theft
theft

By

Published : Aug 11, 2020, 1:33 PM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் புகழ்பெற்ற பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் அருகிலேயே தாலுகா காவல் நிலையம், டிஎஸ்பி அலுவலகம், காவலர் குடியிருப்பு ஆகிய பகுதிகளும் உள்ளன.

தற்போது, கரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசு உத்தரவுப்படி பெரிய கோயில்களில் பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதி இல்லாததால் பெரிய மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் அனுமதியின்றி நாள்தோறும் பூசாரிகள் மட்டும் பூஜை செய்து வருகின்றனர்.

கோயில் உண்டியலை திருட முயற்சி

இந்நிலையில், பெரிய மாரியம்மன் கோயில் உண்டியல் ஒன்றை கொள்ளையர்கள் இருவர் கடந்த 8ஆம் தேதி நள்ளிரவில் தூக்கிச் சென்றுள்ளனர்.

இது குறித்து நகர் காவல் துறையினர் விசாரணை செய்து கொள்ளையர்களை தேடி வந்த நிலையில், தற்போது மாரியம்மன் கோயில் உண்டியலை அடையாளம் தெரியாத நபர்கள் திருட செல்லும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

காவல்துறையினர் ரகசியமாக வைத்திருந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது காவலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:’திமுகவில் இருந்து அதிமுகவிற்கு வருபவர்களை வரவேற்போம்’ - அமைச்சர் செல்லூர் ராஜு

ABOUT THE AUTHOR

...view details