தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏழு வருட காலமாக கழிவுநீர் செல்வதற்கு வழி இல்லாததால் தவிக்கும் பொதுமக்கள்!

விருதுநகர்: ஒ.மேட்டுப்பட்டி அருகே ஏழு வருடங்களுக்கு மேலாக மழைநீர், கழிவு நீர் செல்வதற்கான வழி இல்லாததால் தெருவில் நீர்த்தேங்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

the-public-have-been-without-a-way-to-go-to-the-sewer-for-seven-years
the-public-have-been-without-a-way-to-go-to-the-sewer-for-seven-years

By

Published : Oct 19, 2020, 9:33 PM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள ஒ.மேட்டுப்பட்டி கிராமத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்கள் அனைவரும் கூலி வேலைக்கு செல்பவர்கள். இந்நிலையில் இந்தத் தெருக்களில் சுமார் 7 வருடங்களுக்கு மேலாக மழை நீர், கழிவு நீர் வெளியேற வழியில்லாமல் அங்கேயே தேங்கி நிற்கிறது.

அப்பகுதியிலுள்ள நீர் செல்லும் ஓடைப்பகுதியை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், நீர் வெளியேறுவதற்கு வழியில்லாமல் தேங்கியுள்ளது. தெருவிற்கு செல்லும் பாதை கழிவுநீர் சூழ்ந்துள்ளதால், நடமாட கூட வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர்.

கழிவுநீர் செல்வதற்கு வழி இல்லாததால் தவிக்கும் பொதுமக்கள்

மேலும் பல முறை அரசு அலுவலர்களிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இன்று 20க்கும் அதிகமான பெண்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட முயன்றனர்.

இந்தத் தகவலறிந்து வந்த சாத்தூர் தாலுகா காவல்துறையினர் பொதுமக்களை தடுத்து நிறுத்தி உடனடியாக இந்தப் பணியினை செய்து தருவதாக உறுதியளித்த பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க:நன்றி, வணக்கம் என்றால் எல்லாம் முடிந்துவிட்டது என்று அர்த்தம் - விஜய்சேதுபதி

ABOUT THE AUTHOR

...view details