உலகமெங்கும் கரோனா வைரஸ் கிருமியால் பல உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கும் வேளையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.
கோடை காலமானதால் வெயில் வாட்டி வதைப்பதால் வீட்டிற்குள் இருக்க முடியாமலும் வெளியில் செல்ல முடியாமலும் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்த நேரத்தில் இன்று காலை கனமழையுடன் பொழுது விடிந்தது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான சடையம்பட்டி, மேட்டுப்பட்டி, உப்பத்தூர், கொல்லப்பட்டி, இருக்கன்குடி, தாயில்பட்டி, மேட்டமலை போன்ற கிராமங்களில் இடியுடன் கூடிய கனமழை கடந்த ஒரு மணி நேரமாகப் பெய்து வந்தது.
விருதுநகரில் திடீரென பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி ஒரு வாரத்திற்கு மேலாக வீட்டிலே முடங்கியிருந்த மக்களுக்கு மழையின் காரணமாக நிலப்பரப்பு குளிர்ந்தது மட்டுமின்றி இப்பகுதியில் நிலவி வந்த வெப்பத்தைக் குறைத்து சுவாசித்து வந்த சூடான காற்றும் குளிர்ந்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.