விருதுநகர்:ராமுதேவன் பட்டியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக பிரமுகர் விஜய நல்லதம்பி. இவர் அளித்த பண மோசடி புகாரின் பேரில், சமீபத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டு பின்னர் நிபந்தனையின் பேரில் இடைக்கால பிணையில் விடுதலையானார்.
சில மாதங்களுக்கு முன்னர் விஜய நல்லதம்பி மீது, சாத்தூரை சேர்ந்த ரவீந்திரன் என்பவர் வேலை வாங்கித் தருவதாக 30 லட்ச ரூபாய் பண மோசடி செய்ததாக புகாரளித்துள்ளார்.