விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தரநாச்சியார்புரத்தைச் சேர்ந்த விவசாயி கணேசனின் மகன் இசக்கிமுத்து. பி.ஏ. பட்டம்பெற்று தற்போது உடற்கல்வி ஆசிரியர் துறையில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
கடந்த 2018 ஜூன் மாதம் பூடானில் நடைபெற்ற தெற்காசிய கிராமப்புற விளையாட்டுகளில் தமிழகத்தின் பிரதிநியாகவும், இந்திய கபடி அணிக்கு கேப்டனாகவும் பங்கேற்று விளையாடி தங்கப்பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.