விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சின்னசெட்டி குறிச்சியை சேர்ந்தவர்கள் ராமலட்சுமி-முருகன் தம்பதியினர். கூலி வேலை செய்து வரும் இவர்களுக்கு கார்த்திகா(19), அபிநிக்கா(16) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். சகோதரிகள் இருவரும், தந்தையின் செல்போனில் கேம் விளையாடி பொழுதை கழித்து வந்துள்ளனர்.
கேம் விளையாட செல்போன் தராததால் விஷம் அருந்தி சிறுமி தற்கொலை...! - அருப்புக்கோட்டையில் விஷம் அருந்தி சிறுமி தற்கொலை
விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே கேம் விளையாட அக்கா செல்போன் தராததால் கோபமடைந்த தங்கை விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், வழக்கம் போல் இருவரும் கேம் விளையாடிக் கொண்டிருந்த போது, தங்கைக்கு செல்போனை கொடுக்காமல் கார்த்திகா நீண்ட நேரமாக விளையாடியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அபிநிக்கா, பருத்திக்காட்டுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக அபிநிக்காவை சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி அபிநிக்கா பரிதாபமாக உயிரிழந்தார். தற்கொலை சம்பவம் குறித்து பந்தல்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேம் விளையாட செல்போன் கொடுக்காததால் சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.