தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையில் நாய் குறுக்கே வந்ததால் நேர்ந்த விபத்து: காவலர் உயிரிழப்பு - Virudhunagar M Rediappatti police dies in accident

விருதுநகர்: முத்துராமலிங்கபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த காவலரின் வாகனம் முன் நாய் வந்ததால் நிலைதடுமாறி அவர் சாலை தடுப்பில் மோதி உயிரிழந்தார்.

சாலையில் நாய் குறுக்கே வந்ததால் விபத்தில் உயிரிழந்த காவலர்

By

Published : Nov 21, 2019, 9:36 PM IST

விருதுநகர் மாவட்டம் எம்.ரெட்டியாபட்டி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பிரேம் ஆனந்த் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் முத்துராமலிங்கபுரம் அருகே இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது நாய் ஒன்று குறுக்கே வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அவர் நிலைதடுமாறி சாலையில் இருந்த தடுப்பில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானார். உடனடியாக சக வாகன ஓட்டிகள் காவலரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருப்பினும், சிகிச்சை பலனின்றி காவலர் பரிதாபமாக உயிரிழந்தார். தலைகவசம் அணிந்திருந்த நிலையிலும் தலையில் பலமாக அடிபட்டதே காவலர் உயிரிழப்பிற்கு காரணம் என மருத்துவர்கள் கூறினர்.

இதையும் படிங்க: காவலர் தேர்வில் வெற்றிபெற்றும் பணிக்கு செல்ல முடியாத இளைஞர்

ABOUT THE AUTHOR

...view details