தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: விருதுநகர் அருகே பாலம் உடைந்து வெள்ளப்பெருக்கு! - The bridge is broken and flooded near Virudhunagar

விருதுநகர்: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நான்கு கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

வெள்ளப்பெருக்கு

By

Published : Nov 16, 2019, 1:39 PM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகப் பரவலாக மழை பெய்துவருகிறது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்தது.

இதனால், கூமாபட்டி - பிளவக்கல் அணைக்குச் செல்லும் முக்கியச் சாலையில் உள்ள கோவிந்தமேடு பாலத்துக்கு மேல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலம் உடைந்தது. இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

பாலம் உடைந்து வெள்ளப்பெருக்கு

இதனால், கிழவன் கோயில், வண்ணாரப்பாறை, பட்டுப்பூச்சி ,பிளவக்கல் அணை உள்ளிட்ட 4 கிராமங்களுக்குச் செல்லும் பொதுமக்கள், விவசாயிகள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுத் தவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து கிலி ஏற்படுத்திய யானைக் கூட்டம் விரட்டியடிப்பு

ABOUT THE AUTHOR

...view details